மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமாக 71 பயனாளிகளுக்கு சுமார் 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜி. சுகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டில் கடந்த 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளில் 30 பேருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் விகிதமும், 17 பேருக்கு ஒரு இலட்ச ரூபாய் விகிதமும், 24 பேருக்கு நாற்பதாயிரம் ரூபாய் விகிதமும் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் எஸ்.விநோராஜ், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் உள்ளிட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
7/30/2026 01:02:00 PM
Home
/
Unlabelled
/
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: