கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்காமம்" எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வியாழக்கிழமை 30.07.2026 காலை தீர்த்தோற்சவத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவ்வாலயத்தின் திருவிழா கடந்த 09.07.2026 திகதி திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று வந்தது.
அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேதபாராயண முழக்கங்க அபிஷேகம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில், சிவாகம முறைப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலய திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
No comments: