News Just In

7/28/2026 06:49:00 AM

திருகோவிலில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு வவுனதீவைச் சேர்ந்த பெண் பலி. சிறுவர்கள் உட்பட நால்வருக்கு காயம்

திருகோவிலில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு வவுனதீவைச் சேர்ந்த பெண் பலி. சிறுவர்கள் உட்பட நால்வருக்கு காயம்



அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகர்புரத்தில் மட்டக்களப்பிலிருந்து சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானதுடன் சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த அனைவரும் வவுனதீவைச் சேர்ந்தோர் என தெரிவிக்கப்படுகிறது

குறித்த விபத்தில் மட்டக்களப்பு வவுனதீவு பகுதியை சேர்ந்த 47வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து பற்றிய மேலதிக விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: