News Just In

7/10/2026 06:49:00 AM

கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் பேட்டரி ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!

கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் பேட்டரி ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து



 ​திருநெல்​வேலி மாவட்​டம் கங்​கை​கொண்​டான் சிப்​காட்​டில் ரூ.15,037 கோடி முதலீட்​டில் மின்கல ஆற்​றல் சேமிப்பு அமைப்​பு​கள் (பேட்​டரி) உற்​பத்​திக்​காக முதல்​வர் விஜய் முன்​னிலை​யில் விக்​ரம் சோலார் நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஒரகடம், வல்​லம் ஆகிய 2 இடங்​களில் சூரியஒளி மின்​னழுத்த (Solar PV) தொகுதி உற்​பத்தி ஆலைகளை விக்ரம் சோலார் குழு​மம் நிறு​வி​யுள்​ளது.மேலும், திருநெல்​வேலி மாவட்​டம் கங்​கை​கொண்​டானில் சூரியஒளி மின்​னழுத்த செல்​கள் மற்​றும் தொகுப்​பு​களுக்​கான ஒருங்​கிணைந்த உற்​பத்தி வளாகத்​தை​யும் நிறு​வி​யுள்​ளது.

இந்​நிலை​யில், கங்​கை​கொண்​டான் சிப்​காட் தொழிற்​பூங்​கா​வில் ரூ.15,037 கோடி முதலீட்​டில் 2,670 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், விக்​ரம் சோலார் நிறு​வனத்​தின் பேட்​டரி உற்​பத்தி ஆலைக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் முன்​னிலை​யில் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டது.

இந்த நிகழ்​வில் தொழில் துறை அமைச்​சர் கீர்த்​த​னா, தலை​மைச் செயலர் சாய்​கு​மார், தொழில் துறை செயலர் விஜயகு​மார், வழி​காட்டி நிறுவன மேலாண் இயக்​குநர் தீபக் ஜேக்​கப், விக்​ரம் சோலார் நிறு​வனத்​தின் தலை​வர் ஞானேஷ் சவுத்​ரி, தலைமை செயல் அலு​வலர் அருண் மிட்​டல், மூலதன முதலீட்​டுத் திட்ட இயக்​குநர் அஷ்​வினி அகர்​வால், இயக்​குநர் குழு​வின் ஆலோ​சகர் ஜே.எஸ்​.பஜாஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

No comments: