மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பறங்கியாமடு புகையிரத வீதியில் காணப்படும் சிக்கல்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் புகையிரத பிரச்சனைகளுக்கும் அமைச்சர் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இன்றைய தினம் (10.07.2026) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி–பதில் நேரத்தில், கிழக்கு மாகாண மக்களும் வடக்கு மாகாண மக்களும் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் புகையிரதப் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக நான் விரிவாகக் கேள்வி எழுப்பினேன்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகரம் வரையிலான பல பகுதிகளில் புகையிரத பாதைகள் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி இயங்குகின்றன. பொதுமக்கள் அன்றாடம் உயிர் அச்சத்துடன் புகையிரத பாதைகளை கடக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
மேலும், அனுமதிக்கப்பட்ட புகையிரத கடவைகள் பல இடங்களில் சுமார் 5 கிலோமீற்றர் தூர இடைவெளியில் மட்டுமே அமைந்துள்ளன. இதனால் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு பகுதியை அடைய வேண்டிய மக்கள், குறிப்பாக முச்சக்கர வண்டிகள் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள், 15 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.
கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பறங்கியாமடு பகுதியில், நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த வீதி, அண்மையில் புகையிரத திணைக்களத்தினால் இரும்புக் கடவை அமைத்து மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரையோர கிராமங்களில் வாழும் மக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன்.
அதேபோன்று, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணியாற்றும் கடவைப் பராமரிப்பாளர்களின் நிலைமையையும் சுட்டிக்காட்டினேன். கடந்த காலங்களில் பொலிஸாரின் ஊடாக சிலர் இப்பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த போதிலும், மிகக் குறைந்த கொடுப்பனவு காரணமாக பலர் தற்போது சேவையில் இருந்து விலகியுள்ளனர். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரயில் பாதையை கடக்காமல் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுவதால், இது மிகவும் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் என்பதை எடுத்துரைத்தேன்.
இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு முக்கிய விடயத்தையும் நான் அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
நேற்று அவருடன் கலந்துரையாடியபோது, யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்திற்கான ரயில் சேவை குறித்து பேசினோம். தற்போது வாரத்திற்கு நான்கு ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் தினசரி ரயில் சேவை இயங்கியிருந்தது. அந்த தினசரி சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு நான் வலியுறுத்தினேன்.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து தென்பகுதிகளுக்கு பயணிக்கும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் Railway Warrant வசதியின் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். அவர்களில் சிலர் யாழ்ப்பாணம் அல்லது காங்கேசன்துறையிலிருந்து முழு பயணத்திற்காக முன்பதிவு செய்தாலும், அனுராதபுரம் போன்ற இடங்களில் பயணத்தை நிறுத்துகின்றனர்.
இதன் விளைவாக, குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ காலப்பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு ரயில் இருக்கைகள் கிடைப்பதில் கடுமையான சிரமம் ஏற்படுகிறது. முன்பதிவுகள் மிக விரைவாக நிறைவடைவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே,தினசரி ரயில் சேவையை மீண்டும் இயக்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Railway Warrant மூலம் முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வரம்பை நிர்ணயித்து, மீதமுள்ள இருக்கைகள் பொதுமக்கள் முன்பதிவு செய்யக்கூடிய நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
என்பதே என்னுடைய கோரிக்கையாக இருந்தது.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள்,
புகையிரதக் கடவைப் பராமரிப்பாளர்களுக்கு தற்போது மாதம் ரூ.15,000 கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அந்த கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் புகையிரத சேவை மற்றும் புகையிரதக் கடவை தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் இந்த விடயங்களை உத்தியோகபூர்வமாக முன்வைக்குமாறும், அதன் பின்னர் புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை நேரடியாக கள ஆய்விற்காக அனுப்பி, தேவையான தீர்வுகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் போக்குவரத்து தேவைகள், பாதுகாப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் நடைமுறை தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நான் எதிர்பார்க்கிறேன்.

No comments: