News Just In

7/10/2026 11:09:00 AM

உலகத் தரத்துக்கு மாறும் தமிழ்நாடு மின்சார வாரியம்: ஐஐடி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலகத் தரத்துக்கு மாறும் தமிழ்நாடு மின்சார வாரியம்: ஐஐடி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்



 தமிழக மின்​கட்​டமைப்பை தொழில்​நுட்ப ரீதி​யாக வலுப்​படுத்​த​வும், தடையற்ற மின் விநி​யோகத்தை உறுதி செய்​ய​வும் தமிழ்நாடு மின்​சார வாரி​யம் மற்​றும் சென்னை ஐஐடி இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் நேற்று கையெழுத்​தாகி​உள்​ளது.

சென்​னை, அண்ணா சாலை​யில் உள்ள மின்​சார வாரிய தலை​மையகத்​தில், தமிழகத்​தின் மின்​கட்​டமைப்பை தொழில்​நுட்ப ரீதி​யாக வலுப்​படுத்​த​வும், தடையற்ற மின் விநி​யோகத்தை உறுதி செய்​ய​வும் மின்​சார வாரி​யம் மற்​றும் சென்னை ஐஐடி இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் நேற்று கையெழுத்​தாகி​யுள்​ளது.

எரிசக்தி மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் முன்​னிலை​யில் இந்த ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. தமிழக மின்​சார வாரி​யத் தலை​வர் ரா​தாகிருஷ்ணன், சென்னை ஐஐடி​யின் தொழில்​துறை ஆலோ​சனை மற்​றும் நிதி​யுதவி ஆராய்ச்​சி​யின் தலை​வர் மனு சந்​தானம் ஆகியோர் ஒப்பந்​தத்​தில் கையெழுத்​திட்டனர்.

மாநிலத்​தின் மின் துறையை உலகத் தரத்​துக்கு நவீனமய​மாக்​கும் நோக்​கில் இந்த நீடித்த கூட்​டாண்மை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி செயற்கை நுண்​ணறி​வு, இயந்​திரக் கற்​றல், தரவு பகுப்​பாய்வு மற்​றும் டிஜிட்​டல் தொழில்​நுட்​பங்​கள் மூலம் தரவுவழி சார்ந்து முடி​வெடுக்க முடி​யும். புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி பயன்​பாட்டை மேம்​படுத்​த​வும் மின்கல ஆற்​றல் சேமிப்பு அமைப்​பு​களை உரு​வாக்​க​வும் முடி​யும்.

தொழில்​நுட்ப ஆய்​வு​கள், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களை ஊக்​குவிக்​க​வும் செல​வினங்​களைக் குறைக்​க​வும், மின்​சார வாரிய அதி​காரி​கள் மற்​றும் பொறி​யாளர்​களுக்கு ஐஐடி பேராசிரியர்​கள் மூலம் சிறப்​புப் பயிற்​சிகள் வழங்​கப்​படும்.

இதன் மூலம் மின் உற்​பத்​தி, மின் பரி​மாற்​றம், மின் பகிர்​மானம் மற்​றும் பசுமை எரிசக்​தித் துறை​களில் புதிய தொழில்​நுட்​பங்​கள் புகுத்​தப்​பட்​டு, தமிழக மக்​களுக்கு தடையற்ற மற்​றும் நம்​பக​மான மின் விநி​யோகம் வழங்க வழி​வகை ஏற்​படும்.

முன்​ன​தாக அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல் குமார் பேசுகை​யில், ``செயற்கை நுண்​ணறிவு மூலம் மின்​கட்​டமைப்​பைக் கண்​காணிப்​பது, அனல்​மின் நிலை​யங்​களின் செயல்​திறனை உயர்த்​து​வது, பசுமை ஆற்​றல் மற்​றும் பேட்​டரி சேமிப்​புக் கொள்​கைகளை வகுப்​பது போன்​றவற்​றில் ஐஐடி தொழில்​நுட்ப ஆலோ​சனை​களை வழங்​கும்.

இதன் மூலம் பொது​மக்​களுக்​குத் தடையற்ற மின் விநி​யோகம் உறுதி செய்​யப்​படும். ஸ்மார்ட் மீட்​டர் திட்​டம் குறித்து இன்​னும் இறுதி முடிவு எடுக்​கப்​பட​வில்​லை. மின்​துறை ஆள் பற்​றாக்​குறையைப் போக்க டிஎன்​பிஎஸ்சி வழி​யாக இந்த ஆண்டே 15,000 பணி​யாளர்​களும், 5000 கேங்​மேன்​களும் விரைந்து நியமிக்​கப்பட உள்​ளனர்.

தற்​காலிக​மாக ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் மூலம் பழுதுகள் சரிசெய்​யப்​பட்டு வரு​கின்​றன. ஒப்​பந்த ஊழியர்​களின் ஊதி​யம், இஎஸ்ஐ, பிஎஃப் விவரங்​கள் முறைப்​படுத்​தப்​பட்டு கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளன'' என்​றார்.

சென்னை ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி கூறுகை​யில், ``மின் உற்​பத்தி மற்​றும் தேவை​களுக்கு இடையே​யான இடைவெளியைக் குறைக்க புதிய தொழில்​நுட்​பங்​கள் அவசி​யம். இதற்​காக மின்​சார வாரி​யத் தலை​மையகத்​தி​லும், ஐஐடி​யிலும் கூட்டு ஆராய்ச்சி அலு​வல​கங்​கள் அமைக்​கப்​படும்.

செயற்கை நுண்​ணறிவு மற்​றும் சென்​சார்​கள் மூலம், மின்​கட்​டமைப்​பில் பழுது ஏற்​படும் இடம் முன்​கணிப்பு செய்​யப்​படும். பேரிடர் காலங்​களில் மின்​கட்​டமைப்​பைப் பாது​காப்​பது, சைபர் தாக்​குதல்​களைத் தடுப்​பது மற்​றும் ஸ்மார்ட் மீட்​டர்​களின் தரத்தை மதிப்​பீடு செய்​வது போன்ற பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

ஐஐடி ரிசர்ச் பார்க்​கில் ஆய்வு செய்​யப்​பட்ட `1 மெகா​வாட்' பேட்​டரி சேமிப்​புத் தொழில்​நுட்​பத்தை மின்​சார வாரி​யத்​தில் பெரிய அளவில் அமல்​படுத்த ஆலோ​சிக்​கப்​படும். இந்த நவீன உள்​கட்​டமைப்​புத் திட்​டத்​துக்​காக ஐஐடி​யின் பல்​வேறு துறை​களைச் சேர்ந்த 100-க்​கும் மேற்​பட்​ட பேராசிரியர்​கள்​ களமிறங்க உள்​ளனர்​'' என்​றார்​.

No comments: