News Just In

7/23/2026 05:59:00 PM

சீன பிரஜையிடம் கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

சீன பிரஜையிடம் கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்



சீன தேசியவாதி ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் (2 கோடி) ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத பண்டார என்பவரை வரும் ஜூலை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பஸான் அமரசேன இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்து, 24 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்திய பின்னரே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பான சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள், வங்கிச் கணக்கு விவரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) பணப் பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை 23) அன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சாட்சியாளர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: