News Just In

7/17/2026 12:44:00 PM

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் "மக்கள் உணவகம்" திறப்பு

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் "மக்கள் உணவகம்" திறப்பு


நூருல் ஹுதா உமர்

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967 நண்பர்கள் குழுமத்தின்" அனுசரணையில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் "மக்கள் உணவகம்" இன்று (17) காலை 8.30 மணியளவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், உட்பட பலரும் கலந்து கொண்டு உணவகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்கள்.

பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை மீண்டும் சமூகத்தில் ஊக்குவிப்பதுடன், ஆரோக்கியமான மற்றும் இயற்கை உணவுகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் உணவகம் நிறுவப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, உள்ளூர் விவசாய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய காலை உணவுகள், சிறுதானிய வகைகள், பாரம்பரிய பானங்கள் மற்றும் கிராமிய உணவு வகைகள் இங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 1967 நண்பர்கள் குழும உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு புதிய முயற்சிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


No comments: