News Just In

7/09/2026 03:38:00 PM

காரைதீவு முன்னாள் தவிசாளர் வை. கோபிகாந்த் அவர்களினால் குடிநீர், மின்சார வசதிகளுக்கான நிதி வழங்கி வைப்பு !

காரைதீவு முன்னாள் தவிசாளர் வை. கோபிகாந்த் அவர்களினால் குடிநீர், மின்சார வசதிகளுக்கான நிதி வழங்கி வைப்பு !


நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையினால் கௌரவ உறுப்பினரும், முன்னாள் தவிசாளருமான வை. கோபிகாந்த் அவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று (ஜூலை 09) காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றது.

பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்போது, முன்னாள் தவிசாளரும் தற்போதைய கௌரவ உறுப்பினருமான வை. கோபிகாந்த் அவர்களினால் தேவையுடையோர்களாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகள் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிதி ஆவணங்களை உத்தியோகபூர்வமாக கையேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் தொடர்புடையோர் கலந்துகொண்டதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்தும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments: