News Just In

7/09/2026 11:02:00 AM

கூட்டணி நிலைப்பாடு: வைகோவின் ‘நோபல் பரிசு’ கிண்டலும், திருமாவளவன் பதிலும்!

கூட்டணி நிலைப்பாடு: வைகோவின் ‘நோபல் பரிசு’ கிண்டலும், திருமாவளவன் பதிலும்!



திமுகவுடன் நட்புடன் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு நோபல் பரிசே தரலாம் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கிண்டலாக தெரி​வித்​தார்.

கோவில்​பட்டி அருகே சத்​திரப்​பட்டி கிராமத்​தில் அரசு புறம்​போக்கு நிலத்​தில் வளர்ந்​துள்ள சீமைக்​ கரு​வேல மரங்​களை அகற்றும் பணியை வைகோ தொடங்கி வைத்​தார். பின்​னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறியது:

விவ​சா​யிகளின் பயிர்க் கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்ற கோரிக்​கையை நான் ஆதரிக்​கிறேன். ஆனால், தமிழக அரசு நிதி நெருக்​கடி​யில் சிக்​கித் தவிக்​கிறது. மத்​திய அரசு வஞ்​சகம் இல்​லாமல் நிதி ஒதுக்​கீடு செய்ய வேண்​டும். நிதி கொடுத்​தால் வாக்​குறு​தி​கள் முதல்​வ​ரால் நிறைவேற்ற முடி​யும்.
அரசு திட்​டங்​களை ஆளுநர் ஆய்வு செய்​வது கண்​டிக்​கத்​தக்​கது. அவரிடம் திமுக அளித்த மனுவில், 356 பிரி​வின் கீழ் அறிக்​கை அனுப்​பலாமே என்று தெரிவித்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஆளுநர் ஆட்​சியை தமிழகத்​தில் கொண்​டுவர ஏன் நினைக்கிறீர்கள், ஆளுநர் ஆட்சி என்றால் இங்கு பாஜகதான் ஆட்சி செய்​யும். அப்​படி​யென்​றால், நீங்​கள் பாஜகவை எதிர்ப்​ப​தாக கூறு​வதெல்​லாம் நாடக​மா?

முதல்​வர் விஜய் கரூருக்கு செல்​லக் கூடாது என்று சென்றவர்களுக்கு உச்ச நீதி​மன்​றம் சாட்​டையடி அடித்​துள்​ளது. இன்​னொரு முறை தேர்​தல் வந்​தால் 180 இடங்​களில் விஜய் வெற்றி பெறுவார். தவெக ஆட்​சி​யில் இடம் பெற்​றிருந்​தாலும், திமுக தலை​வர் ஸ்டா​லினுடனான கருத்து பரிமாற்​றம் தொடர்வதாக, திருமாவளவன் கூறியதற்​கு, நோபல் பரிசே கொடுக்​கலாம். இவ்​வாறு கூறி​னார்.

பரிந்துரை செய்ததற்கு நன்றி: திருமாவளவன் பதில்
தனக்கு நோபல் பரிசு கிடைக்க பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் பதில் அளித்துள்ளார்.

அரியலூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: ஒரு கூட்​ட​ணியி​லிருந்து ஒரு கட்சி வெளி​யேறி​விட்​டால் அந்​தக் கட்​சியை எதிரிக்​கட்​சி​யாக பார்க்​கக்​கூடிய, தவறான அரசி​யல் கண்​ணோட்​டம் தமிழக அரசி​யலில் உள்​ளது. வில​கிய பின்​னரும் நட்​புறவு கூடா​தா, பாஜகவை வீழ்த்த இண்டியா கூட்​ட​ணி​யில் தவெக​வும், திமுக​வும் இணைந்து செயல்பட வேண்​டும்.

தவெக அமைச்​சர​வை​யில் நாங்​கள் சேர்ந்​தா​லும், திமுக​வுட​னான உறவு முடியவில்​லை, நட்பு தொடர்​கிறது என்​றேன்.அதே​போல, விருது வழங்​கும் விழா​வில் நாங்​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அந்​தக் கூட்​ட​ணியை முறித்​துக் கொண்​ட​தாக​வும் சொல்​ல​வில்​லை.

இப்​படி ஒரு நிலை​யில், எங்​கள் கட்சி முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் திமுக​வில் சேர்ந்​துள்​ளார். இதன்​மூலம் திமுக கூட்​ட​ணி​யில் விசிக இல்லை என உணர்த்​தி​விட்​டார்​கள். இந்த நிகழ்வை மனதில் வைத்​துக் கொண்டு நாங்​கள் ஒன்​றும் திமுக​வுடன் சண்டை போட​வில்​லை.

வட மாநிலங்​களில் பாஜக​வுடன் கூட்​ட​ணி​யில் இருக்​கும் கட்​சிகள் காங்​கிரசுடன் நட்​பாக​வும், காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் இருக்​கும் கட்​சிகள் பாஜக​வுடன் நட்​பாக​வும் உள்​ளன. நாடாளு​மன்​றத்​துக்​குள் சண்டை போட்​டுக் கொண்​டாலும் வெளி​யில் வந்து கை கொடுத்​து கொள்​கிறார்​கள். அந்த நாகரி​கம் தமிழகத்​துக்கு ஏன் வரக்​கூ​டாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதனிடையே தவெக அமைச்​சர​வை​யில் இருந்​தா​லும், திமுக​வுடன் நட்​புடன் இருப்​ப​தாக திரு​மாவளவன் கூறி​யிருந்​தற்கு “இது நோபல் பரிசு கொடுக்​கப்பட வேண்​டிய கருத்​து” என வைகோ கிண்​டலாக கூறி​னார். இதற்கு பதில் அளித்த திரு​மாவளவன், “எனக்கு நோபல் பரிசு பரிந்​துரைத்​தமைக்கு நன்​றி. பரிசு கிடைத்​தால் அதற்​கும் நன்​றி’’ என்​றார்.

No comments: