(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் - கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன், 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ரன்விமன வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
புணாணை கிழக்கு 211டீ கிராம சேவகர் பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாரக் தலைமையில் இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் ஜெயானந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பிரதேச செயலாளருடன் இணைந்து வீடுகளின் திறப்புக்களை பயனாளிகளிடம் வழங்கி வைத்தனர்.
இந்த வீடமைப்புத் திட்டங்கள் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, பாதுகாப்பான நிலையான வாழ்விடத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதேச உதவிச் செயலாளர் ஜுமானா ஹஸீன், மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத் உட்பட இன்னும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments: