News Just In

7/26/2026 02:15:00 PM

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேரூந்து மட்டக்களப்பு தன்னாமுனையில் விபத்தில் சிக்கியது!

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேரூந்து மட்டக்களப்பு தன்னாமுனையில் விபத்தில் சிக்கியது

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பஸ் வண்டியொன்று இன்று (26) அதிகாலை மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் தன்னாமுனைப் பகுதியில் பாதையை விட்டு விலகி அருகிலிருந்த கடைகளுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

​இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பஸ் வண்டிக்கும் அருகிலிருந்த கடைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இவ்விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
​அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இருப்பினும், பஸ்ஸில் பயணித்த பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: