News Just In

7/26/2026 02:32:00 PM

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்குஅவமதிப்பு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்குஅவமதிப்பு 


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று  காலை 08 மணிக்கு ஆரம்பமானது.
ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். என்ற போதிலும் ஐந்து ஊடகவியலாளர்களே வருகை தந்திருந்தனர்.

இதற்கு முதல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் அதிகமான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அது ஒரு களஞ்சியசாலை போன்று இருந்தது.அதுமட்டுமின்றி அங்கு போடப்பட்டிருந்த மேசைகளில் புழுதி நிறைந்து இருந்தது. உடைந்த கதிரைகள் களை போட்டிருந்தது.இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தமது கவலையை  தெரிவித்தனர்  

No comments: