News Just In

7/24/2026 06:55:00 AM

பிரித்தானியாவில் இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்

பிரித்தானியாவில் இராஜாங்க அமைச்சராகஇலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்



பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: