News Just In

7/25/2026 07:07:00 PM

9600 குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் களுவாஞ்சிக்குடியில் நவீன தபாலகம் திறந்து வைப்பு

9600 குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் களுவாஞ்சிக்குடியில் நவீன தபாலகம் திறந்து வைப்பு



(ஏறாவூர் நிருபர் - ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ள நவீன தபாலகத்தின் மூலம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 9600 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் தபாலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்திருந்தது.

இத்தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த நிலையில் அது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது புதிதாக தபாலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படடுள்ளது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார, பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண தபால் மா அதிபர் சி. பிரகாஷ், அரச உயர் அதிகாரிகள், தபால் நிணைக்கள அதிகாரிகள், பொது மக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments: