மட்டக்களப்பின் பல்வேறு இடங்களில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தின நிகழ்வுகள் ஞாயிறன்று 19.07.2026 வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது.
கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் புகழ்பெற்ற பாவான 'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” பாடல் இசைக்கப்பட்டு சிரார்த்த தின நிகழ்வுகள் துவக்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, சிவானந்தா தேசிய பாடசாலையின் மாணவர்களின் பங்கேற்புடன் சுவாமியின் திருவுருப் படம் தாங்கியவாறு மட்டக்களப்பு - கல்முனை பிரதான நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்று பூங்காவில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை அமைவிடத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் உதவிப் பொது முகாமையாளர் பிரம்மஜானந்தா ஜீ மகஹராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் கே. பாஸ்கரன், செயலாளர் எஸ். ஜெயராஜா, மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எம். செல்வராசா உட்பட சிவானந்தா தேசிய பாடசாலை, வின்சென்ற் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக் கல்லூரி, மகாஜன கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் மாணவ மாணவிகளும் அதிபர், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்
No comments: