(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு - வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலயத்தின் 182வது வருடாந்த கூட்டுத் திருப்பலி திருவிழா எதிர்வரும் 26.07.2026 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு நீதித்துறை ஆயர் பதிலாள் அருட்பணி ரீ.ஏ. ஜுலியன் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இவ்வாலயத்தின் திருவிழா கடந்த 17.07.2026 திகதி பங்குத்தந்தை ஏ. ஜென்சன் லொயிட் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
முதலாம் நவ நாளில் “திருக்குடும்பம் இறைவனின் அன்புத்திட்டத்தின் மாதிரி" என்ற சிந்தனையில் அருட்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் அருளுரையாற்றி திருப்பலி நிறைவேற்றினார். 3ம் வட்டார இறைமக்கள் திருப்பலியை சிறப்பித்தார்கள்.
No comments: