
முதல்வராக பதவி வகிக்கும் போது ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கொண்டாட்டமான தருணமாகும்.
அதன்படி, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஒருவரின் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவர் நடித்த "மீனவ நண்பன்" திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளியானது.
இதனைத்தொடர்ந்து தற்போது, தமிழக முதல்வராக இருக்கும் விஜய் நடித்த "ஜனநாயகன்" திரைப்படமும் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தவெக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் நடித்த "ஜனநாயகன்'' திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதேபோல், எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு "மீனவ நண்பன்" திரைப்படம் வெளியானது.
மேலும், அவர் முதல்வராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைப்படமும் வெளியானது.

இந்தப் படத்தின் சில பணிகளை முடிக்க எம்ஜிஆர் ஆளுநரிடம் 10 நாட்கள் அனுமதி கோரியதாகவும் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது திரைப்படங்கள் மூலம் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்.
அதேபோல், விஜய்யும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தனது படங்கள் மூலம் அரசியல் பேசியுள்ளார்.
இருவரின் அரசியல் சார்ந்த படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன
No comments: