News Just In

6/06/2026 08:20:00 AM

தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் சிறிதரனுக்கு அனுப்பிய கடிதம்!

தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் சிறிதரனுக்கு அனுப்பிய கடிதம்!


தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் 2024,ஜனவரி,21.ல் தெரிவான யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு அனுப்பியுள்ளார்.          

இந்த விடயத்தை ஊடகங்களில் குறிப்பிட்ட சிவஞானம் சிறிதரன் எம் பி நீண்டகாலமாக கட்சிக்காக எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல் பணியாற்றியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

நிர்வாகச்செயலாளர் குலநாயகம் 62, வருடங்களாக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய மூத்த உறுப்பினர்.கடந்த 2024, பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு ஆண்டுக் காலத்திற்கு மூத்த உறுப்பினர் நிர்வாகச்செயலாளர் குலநாயகத்துக்கு வழங்க வேண்டும் என அரசியல் குழுவில் தாம் முன்மொழிந்திருந்ததாகவும், அதனை அரசியல் குழுவில் சிலர்  ஏற்கவில்லை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உள்கட்டமைப்பின் ஊடாகவே தீர்க்க முயற்சிப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (05/06/2026) கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

No comments: