அருட்டந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு ஜூன் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் (கல்லறை) இ ன்றைய தினம் காலை 7.00 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் அர்ப்பணிப்புமிக்க வாழ்வையும், சமாதானம், நீதி மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவுகூரும் இந்நாளில், பொதுமக்கள், ஆன்மீகப் பெரியார்கள் என அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.
நிகழ்வு விபரம்:
திகதி: 06.06.2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 7.00 மணி
இடம்: புளியந்தீவு புனித மரியாள் பேராலய வளாகம், மட்டக்களப்பு.
6/06/2026 08:21:00 AM
அருட்டந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: