
ஹொரணை நகரில் அரச வங்கியொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெரில் கைதான வங்கியின் உதவி முகாமையாளர் பல பெண்களுடன் தொடர்பு பேணியதாகவும், இதனால் அதிகளவு கடன் பட்டிருந்தார் எனவும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
சுமார் மூன்றரை கோடி ரூபா பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கங்கொட வேவல பகுதியைச் சேர்ந்த 54 வயதான உதவி முகாமையாளரும், புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 43 வயதான வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பணத்தில் ஒரு தொகுதி பணம் வங்கியிலேயே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுமார் பதினான்கு லட்சம் ரூபா பணம் வங்கியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் வேறும் கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக இந்தப் பணம் எடுத்துச் செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படவிருந்த மூன்றரை கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக உதவி முகாமையாளர் வங்கிக்கு அறிவித்திருந்தார்.
எனினும் விசாரணைகளின் போது குறித்த உதவி முகாமையாளர் கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் வங்கியின் சீ.சீ.ரீ.வி கட்டமைப்பினை குறித்த உதவி முகாமையாளர் செயலிழக்கச் செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த உதவி முகாமையாளர் பல இடங்களில் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கடன்களை மீளச் செலுத்த முடியாது பெரும் நெருக்கடிக்குள் இருந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபர் பல மாடல் அழகி உள்ளிட்ட பல பெண்களுடன் தொடர்பு பேணியுள்ளதாகவும் இதனால் அதிகளவு பணம் செலவழித்துள்ளதாகவும் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: