News Just In

6/22/2026 05:36:00 PM

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஒரு மில்லியன் மக்களை நோரடியாகச் சந்தித்து போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டம்

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் 1 மில்லியன் மக்களை நோரடியாகச் சந்தித்து போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்திட்டத்தின் வாயிலாக 1 மில்லியன் மக்களுக்கு விழிப்புணர்வூட்டவுள்ளதாக பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிவித்த மட்டக்களப்பிலுள்ள பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் இணைப்பாளர் கே. சுரேஸ்

“மனம் எவ்வாறோ, நாமும் அவ்வாறே" என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு “செழிப்பான மனதின் மூலம் போதைப்பாவனையிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்" எனும் தொனிப்பொருளினூடாக பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால், 18 மாத காலத்தினுள், 1 மில்லியன் மக்களை நோரடியாகச் சந்தித்து போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் தலைமையில், மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையில் எதிர்வரும் 28 திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இச்செயற்திட்டத்தின் மூலம் தேசிய ரீதியில் மேற்கொள்ளவுள்ள வெளியீடு, போதைப்பொருள் விழிப்புணர்வு பாடல், போதைப்பொருள் தீங்கு சம்பந்தமான விழிப்புணர்வுப் பதாதைகள் காட்சிப்படுத்தல் என்பன இடம்பெறும்.

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் இலங்கையில் கடந்த 35 வருடங்களாக சேவையாற்றி வருவதாகவும் சுரேஸ் குறிப்பிட்டார்.

No comments: