News Just In

6/02/2026 07:29:00 AM

இறக்காமம் சிறுமி துஷ்பிரயோக வழக்கு: சந்தேகநபர் மெளலவி அல்ல – உலமா சபை

இறக்காமம் சிறுமி துஷ்பிரயோக வழக்கு: சந்தேகநபர் மெளலவி அல்ல – உலமா சபை


இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மெளலவியல்ல என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்துள்ளது.
South Asians & Diaspora

அறிக்கை ஒன்றை வெளியிட்டு உலமா சபை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் "மௌலவி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும்.

குறித்த சந்தேக நபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் பட்டம் பெற்ற ஒரு மௌலவி அல்ல, மேலும் அவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலோ அல்லது இறக்காமம் கிளைச் சபையிலோ அங்கத்தவரும் அல்ல என்பதை எமது சபை உறுதிப்படுத்துவதுடன் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

No comments: