News Just In

6/25/2026 09:42:00 AM

பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு! மற்றுமொரு ராஜபக்ச அதிரடியாக கைது

பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு! மற்றுமொரு ராஜபக்ச அதிரடியாக கைது



முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஹோரண ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற கும்பலை சேர்ந்தவரான நந்துன் சிந்தக்க எனப்படும் ஹரக் கட்டாவை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உத்தரவுகளில் இருந்து விடுவித்து, வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டிற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சாதாரண கைதியாக வைத்திருப்பதற்காக, 1,200 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

No comments: