News Just In

6/02/2026 11:28:00 AM

காரைதீவு பிரதேச சபை தவிசாளரை சந்தித்து கலந்துரையாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

காரைதீவு பிரதேச சபை தவிசாளரை சந்தித்து கலந்துரையாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


நூருல் ஹுதா உமர்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் அவர்களை இன்று (01) காரைதீவு பிரதேச சபை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், சமகால அரசியல் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், உள்ளூராட்சி நிர்வாக செயற்பாடுகள், மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் எதிர்கால முன்னேற்றத் திட்டங்கள் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன், பிரதேச மக்களின் நலன் சார்ந்த விடயங்கள், பொது சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பிரதேசத்தின் சமூக, பொருளாதார மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

மேலும், காரைதீவு பிரதேச சபை தவிசாளராகப் பொறுப்பேற்றதன் பின்னர் எஸ். பாஸ்கரன் அவர்கள் மக்கள் நலன் சார்ந்த பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், அவரது சேவைகளைப் பாராட்டியதுடன் எதிர்காலப் பணிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நல்லிணக்கமும் ஒத்துழைப்பும் கொண்ட உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பு, பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கான சந்திப்பாக அமைந்தது.

No comments: