"வளமான நாட்டின் பெருமை அவளே, தேசத்தின் வழிகாட்டி" எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி, 2026 சர்வதேச மகளிர் தினத்திற்கு இணைவாக, அம்பாறை மாவட்டத்தின் தைரியமிக்க பெண் தொழில்முனைவோரைப் பாராட்டும் விசேட விழா அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்கி வரும் பெண் தொழில்முனைவோர் பலர் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பெண் தொழில்முனைவோரின் வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை வழங்குதலும் இதன்போது இடம்பெற்றது.
அரசின் தலையீட்டுடன் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரசியல் அதிகாரத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரியந்த விஜேரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் முத்து ரத்வத்தே உட்பட பிரதேசத்தின் அரச அதிகாரிகளும், பல பெண் தொழில்முனைவோர் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
பிராந்திய மட்டத்திலான பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வென்றெடுப்பதற்கும், அவர்களை நாட்டின் வழிகாட்டிகளாக மாற்றுவதற்கும் இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்
No comments: