News Just In

6/08/2026 08:13:00 AM

சென்னை மாநகராட்சியில் சட்ட விதிப்படி சொத்து கணக்கை மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் அளிக்கவில்லை!

சென்னை மாநகராட்சியில் சட்ட விதிப்படி சொத்து கணக்கை மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் அளிக்கவில்லை
நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என அதிகாரிகள் கைவிரிப்பு



சென்னை மாநக​ராட்​சி​யில் மேயர் பிரியா உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​கள் சட்ட விதி​களின்​படி சொத்துக் கணக்கை அளிக்​க​வில்லை என தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழக அரசு, தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் சட்​டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்​தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்​கப்​பட்​டது.

அதில், ``நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள், துணை தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள் மற்​றும் கவுன்​சிலர்​கள் தங்​கள் சொத்​துக் கணக்​கு, தங்​கள் மனை​வி, குழந்​தைகளின் சொத்​துக் கணக்​கு​களை பதவி​யேற்ற 90 நாட்​களுக்​குள் மாநக​ராட்​சி​யில் சமர்ப்​பிக்க வேண்​டும்'' என கூறப்​பட்​டுள்​ளது.

அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு தமிழ்​நாடு நகரப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் விதி​கள் கொண்​டு​வரப்​பட்​டன. அதில் 183-வது விதி​யில், ``அந்த சொத்​துக் கணக்கு விவரங்​களை மாநக​ராட்சி ஆணை​யரிடம் வழங்க வேண்​டும். அதை ஆணை​யர் பாது​காப்​பாக வைத்​திருக்க வேண்​டும்'' என கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஆம் ஆத்மி கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் சங்​கர் என்​பவர் சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் தாக்​கல் செய்த சொத்​துக் கணக்கு விவரங்​கள் குறித்​து, தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் கீழ் கேட்​டிருந்​தார்.

இதற்கு பதிலளித்த மாநக​ராட்சி நிர்​வாகம், ``சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 200 வார்டு கவுன்​சிலர்​களில் 157 பேர் சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​ய​வில்​லை. இதில் 4 பேர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​டனர்.

2 பேர் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டு​விட்​டனர். 43 கவுன்​சிலர்​கள் மட்​டுமே தங்​கள் சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​துள்​ளனர்'' என தெரி​வித்​திருந்​து. சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​யாதவர்​கள் பட்​டியலை​யும் மாநக​ராட்சி வழங்​கி​யுள்​ளது.

அதில் மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார் உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​களின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இவர்​களின் பதவிக்​காலம் இன்​னும் 8 மாதங்​கள் மட்​டுமே உள்ள நிலை​யில், அரசின் விதி​களை மதிக்​காமல் மக்​கள் பிர​தி​நி​தி​களாக தொடர்ந்து வரு​வது சர்ச்​சைக்​கு உள்​ளாகி​யுள்​ளது.

No comments: