
2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண நிலை (O/L) தேர்வு முடிவுகள் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், முடிவுகளை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் வெளியீட்டிற்கு முன்னதாக ஆவணங்களை இறுதி செய்து வருவதாகவும் கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுரா செனவிரத்ன உறுதிப்படுத்தினார்.
கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண நிலைத் தேர்வு பெப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 வரை நடத்தப்பட்டது, இதில் நாடு தழுவிய அளவில் மொத்தம் 451,463 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், வரவிருக்கும் உயர்தர (A/L) தேர்வு தொடர்பான கவலைகளுக்கும் பிரதி அமைச்சர் பதிலளித்தார். தேர்வை ஒத்திவைக்குமாறு சில குழுக்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அது திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினர் ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாலும், திட்டமிடப்பட்ட கால அட்டவணையை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று டாக்டர் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர தேர்வுகள் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என்று தேர்வுகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
No comments: