ஸ்ரீ புத்த வருடம் 2570 வது வெசாக் பூரணை மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டச் செயலக வளாகத்தில் வெசாக் வார நிகழ்வுகள் புதனன்று 27.05.2026 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஓர் அங்கமாக வெசாக் வாரத்தின் முதலாவது நாளான இன்று மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்டச் செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதான நிகழ்வை மேற்கொண்டதுடன் பயன் தரும் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் வெசாக் வார நிகழ்வுகள் கிரமமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: