News Just In

5/27/2026 04:57:00 PM

சாதனை படைத்த மாற்றுத்திறனாளிளுக்கு கௌரவம்!

சாதனை படைத்த மாற்றுத்திறனாளிளுக்கு கௌரவம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த, சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளைக் கௌரவித்துப் பாராட்டும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பயிலுனர் விளையாட்டு நிகழ்வில் சிறப்பான முறையில் சாதனை படைத்தவர்களே இவ்வாறு கௌரவித்து பாராட்டப் பட்டனர்.

தேசிய பயிலுனர் விளையாட்டு நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 21 மாற்றுத் திறனாளிப் போட்டியாளர்கள் கலந்துகொண்டதில் 14 பேர் சாதனையாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்தப் பாராட்டு நிகழ்வில் பிரதேச உதவில் செயலாளர் சில்மியா, திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.எப்.ஆர். பரீட், சமூக சேவை உத்தியோகத்தர் எம். நஜிமுதீன், காத்தான்குடி பிரதேச லயன்ஸ் கழகத் தலைவர் எம்.கே.எம். பிலால், உறுப்பினர்கள் றிபாய் கலீல், சிறாஜ் சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதிகா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: