மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் நிறுவன வலையமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கவும், எதிர்நோக்கும் சவால்களை கையாள்வதை நோக்கமாகக் கொண்டும் கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரீ.பி. தெஹிதெனிய தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 26.05.2026 கலந்துரையாடல் இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன், பிரதேச செயலாளர்கள், பிரதேச உதவிச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலுக்குத் தலைமையேற்றிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் தெஹிதெனிய, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல விரும்பத்தகாத சம்பவங்களையும் ஆதாரங்களாக சுட்டிக்காட்டி அவைபோன்று இனிமேல் இடம்பெறாத வண்ணம் அரசாங்க அலுவலர்கள் மிகவும் விழிப்பாக இருந்து தமது கடமைகளைச் செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டார்.
No comments: