News Just In

5/27/2026 12:08:00 PM

சத்தியக் கடதாசி ; பிள்ளையானால் கோத்தபாய கைதாவது உறுதி; கிலியில் ராஜபக்சாக்கள்

சத்தியக் கடதாசி ; பிள்ளையானால் கோத்தபாய கைதாவது உறுதி; கிலியில் ராஜபக்சாக்கள்


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கைதாவது உறுதியாகியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் பிள்ளையான் உட்பட சஹரான் குழுவுக்கு இவர் பல வழிகளில் இந்தக் கொலைகளை செய்ய வழிகாட்டி உள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் திலீப பீரிஸ் நேற்றையதினம் (26) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அசாத் மௌலானா நீதிமன்றத்தில் சாட்சியம்

இதனிடையே பிள்ளையானின் முன்னாள் இணைப்பதிகாரியாக செயற்பட்டதாக கூறப்படும் அசாத் மௌலானா இவர்களுக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பித்து உள்ளதாகவும் கூர்அப்படுகின்றது.

அதோடு தனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் இலங்கைக்கு வருகை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே கோத்தபாய ராஜபக்ச கைதாவது உறுதியாகியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: