News Just In

5/08/2026 11:25:00 AM

கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் சிறப்பான சாதனை

கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் சிறப்பான சாதனை


நூருல் ஹுதா உமர்

2026 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் மொத்தமாக 05 முதலாம் இடங்கள், 01 இரண்டாம் இடம், 02 மூன்றாம் இடங்கள் எனப் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வெற்றிகளுக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து வழிநடத்திய தமிழ் துறை ஆசிரியர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் பாடசாலை சார்பாக தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்திலும் மாணவர்கள் கல்வி, மொழி மற்றும் கலாசாரத் துறைகளில் தொடர்ந்தும் சாதனைகள் படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

No comments: