News Just In

5/28/2026 10:33:00 AM

மத்திய கிழக்கு போரில் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்கள்! அதிரடியாக நாடு கடத்தல்

மத்திய கிழக்கு போரில் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்கள்! அதிரடியாக நாடு கடத்தல்



மத்திய கிழக்கு நாடான அபுதாபியில் இருந்து 7 இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஏழு பேரும் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அபுதாபியில் தங்கியிருந்த போது, மத்திய கிழக்கு போரின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் புகைப்படங்கள், வீடியோக்களைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்தமை, அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டமை மற்றும் அவற்றுக்கு லைக், கமெண்ட் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 7 இலங்கை இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று இரவு 09.25 மணியளவில் அபுதாபியிலிருந்து எயார் அரேபியா விமான சேவைக்குச் சொந்தமான 3L-708 என்ற விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் அம்பாலங்கொட, புத்தளம், பண்டாரகம, பொரளை, பொலநறுவை, வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: