News Just In

5/28/2026 10:31:00 AM

இறக்காமத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை !

இறக்காமத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை !



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (28) காலை இறக்காமம் குளக்கரை மைதானத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

அதிகாலை முதலே பெருமளவிலான முஸ்லிம் மக்கள் மைதானத்துக்கு வருகை தந்து பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். மத அறிஞர்களின் வழிகாட்டுதலுடன் தொழுகை நடத்தப்பட்டதுடன், ஹஜ்ஜின் தியாகப் பண்பு, சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவம் தொடர்பாக உரைகளும் இடம்பெற்றன.

தொழுகையைத் தொடர்ந்து உலக அமைதி, நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

பின்னர் தொழுகையில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதுடன், அன்பும் ஒற்றுமையும் நிறைந்த ஆன்மீக சூழல் அங்கு நிலவியது.





No comments: