News Just In

5/26/2026 07:04:00 AM

இயக்குனர்களின் கோரிக்கை! மீண்டும் சினிமாவிற்கு வரும் விஜய் - விபரம்

இயக்குனர்களின் கோரிக்கை! மீண்டும் சினிமாவிற்கு வரும் விஜய் - விபரம் 


தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகப்போகிறோன் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் சினிமாவிற்குள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் அவரின் மன தைரியத்தை தன்னம்பிக்கையை பாராட்ட தான் வேண்டும். அவர் முதல்வராக பணியேற்றிருக்கிறார் என்றால் அவ்வளவு தடைகளையும் தாண்டி தாண்டி தான் அந்த பதவியை ஏற்றிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வந்ததன் பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார். ஆனால் விஜய் இதை திடீர் என்று சொன்னதால் மீண்டும் முயற்ச்சியை கைவிடாமல் சினிமாத்துறையில் இருக்கும் முக்கிய இயக்குனர்கள் விஜய்யை சந்தித்துள்ளனர்.

விஜய் ஒரு ஹிட்டான ஹீரோ என்பதால் அவருடைய படம் கோடிக்கணக்கான வசூலை தரும். அதை நம்பி பல இயக்குனர்கள் இருப்பார்கள்.

இப்படி விஜய்யை நம்பி பல கதைகள் எழுதி வைத்திருந்த இயக்குனர்களுக்கு வேலை இல்லாமல் போனதுடன் சினிமாத்துறையில் வீழ்ச்சியும் ஏற்பட்டதாம்.

இந்த நிலையில் திரைத்துறையில் இருந்தவர்கள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததும் இயக்குனர்கள் விஜய்யிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளர்.

நடிகர் விஜய் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர். இவருடைய கடைசிப்படம் 'ஜனநாயகன்' தான்.

ஆனால் அவரை நம்பி கதை ரெடி பண்ணி வைத்திருந்த டைரக்டர்களும், முதலீடு செய்யத் தயாராக இருந்த தயாரிப்பாளர்களுக்கும் இது அதிர்ச்சியை கொடுத்தது.

விஜய் முதலமைச்சர் ஆனதை கொண்டாடிய தமிழ் இயக்குநர்கள் சங்கம், அவரை நேரில் சந்திச்சு வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க.

அப்போ, 'நீங்க சினிமாவை விட்டு விலக வேண்டாம், தொடர்ந்து நடிக்கணும்' வேண்டும் என்று கேட்டதாக தற்போது செய்தி கிடைத்துள்ளதுடன் விஜய் அதற்கு அவர் முன்னாடியே கூறியது போல இனி நான் சினிமாத்துறைக்குள் வர மாட்டேன் என பதில் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

No comments: