
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்றுகள் தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக்காய்ச்சல் (Meningitis / Encephalitis) நோயின் அறிகுறிகள் வயது மற்றும் நோயின் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக காணப்படும் அறிகுறிகள்:
கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, கழுத்து இறுக்கம் அல்லது கழுத்தை நகர்த்த சிரமம், வாந்தி அல்லது குமட்டல், வெளிச்சத்தை பார்க்க சிரமம் (ஒளி எரிச்சல்), மயக்கம் அல்லது அதிக தூக்கநிலை, குழப்பம் அல்லது பேசுவதில் மாற்றம், வலிப்பு (Fits), உடல் பலவீனம்
சிலருக்கு தோலில் சிரங்கு அல்லது புள்ளிகள்
குழந்தைகளில் காணப்படக்கூடிய அறிகுறிகள்
தொடர்ந்து அழுதல், பால்/உணவு அருந்த மறுத்தல், அதிக தூக்கம் அல்லது சோர்வு, காய்ச்சல்
இந்நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்
No comments: