
2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (09) அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரண தொகை வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த கட்டண உயர்வு சுமார் 5 சதவீத மின் நுகர்வோருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 95 சதவீத நுகர்வோருக்கு புதிய மின்சாரக் கட்டண உயர்வு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட இழப்புகள் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படமாட்டாது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2026 இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை கட்டண உயர்வு முன்மொழியப்பட்டிருந்த நிலையில், தற்போது 18 சதவீதம் வரை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
No comments: