News Just In

4/14/2026 08:18:00 PM

டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள் மற்றும் அவரது மனநிலை குறித்து மிகக் கடுமையான விமர்சனம் !

டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள் மற்றும் அவரது மனநிலை குறித்து மிகக் கடுமையான விமர்சனம் !


அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ இயக்குநர் John Brennan, டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள் மற்றும் அவரது மனநிலை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.சமீபத்தில் MS Now ( MSNBC) தொலைக்காட்சியின் நேர்காணலில் பேசிய அவர், டிரம்ப் தற்போது "தெளிவாக மனநிலை பிறழ்ந்தவர்" (Clearly unhinged) என்று வர்ணித்துள்ளார்.


 ஏப்ரல் 7 ஆம் தேதி ஈரான் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்" என்ற மிரட்டலானது, அவர் அணு ஆயுதங்களைக் கையாளும் தகுதியை இழந்துவிட்டார் என்பதையே காட்டுவதாக பிரென்னன் எச்சரித்துள்ளார்.
"அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டம் டிரம்பை மனதில் வைத்து அவருக்குப் பொருத்தமாக எழுதப்பட்டது போலவே உள்ளது" என்று குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி பதவிக்குத் தகுதியற்ற ஒருவரை நீக்கும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்பை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

​"டிரம்பின் தற்போதைய திணறல்கள் மற்றும் ஆக்ரோஷமான முடிவுகளைப் பார்க்கும்போது, அவரை விட ஈரானை நம்பலாம்" என்று அவர் கூறியிருப்பது அமெரிக்க அரசியலில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
ஒரு முன்னாள் உளவுத்துறைத் தலைவரே தற்போதைய அதிபரை "மனநிலை பாதிக்கப்பட்டவர்" எனப் பகிரங்கமாகச் சாடியிருப்பது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: