News Just In

4/15/2026 06:11:00 AM

பிள்ளையான் - சுரேஷ் சலேவை அடுத்து ஆதாரத்துடன் சிக்குகிறாரா கோட்டாபய

பிள்ளையான் - சுரேஷ் சலேவை அடுத்து ஆதாரத்துடன் சிக்குகிறாரா கோட்டாபய



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிரேஸ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்ட அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்றையமுன் தினம்(13.4.2026) குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை மறைத்து வைத்திருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவினால் மறைக்கப்பட்ட அறிக்கையை குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கி விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து இருக்கின்றார்.

இந்த அறிக்கையைில் பல உண்மைகள் மற்றும் துல்லியமான தகவல்கள் இருப்பதை அறிந்து கொண்டதை அடுத்தே அநுர விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விரைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சுத்திரதாரி மற்றும் அவருக்கு உதவியவர்கள் யார் என்பதை மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

No comments: