News Just In

4/04/2026 06:17:00 AM

குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை 

குவைத் அரசாங்கத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான மினா அல்-அஹ்மதி தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என்றும், நாடு முழுவதும் மக்கள் "உயர் எச்சரிக்கை நிலையில்" இருப்பதாகவும் குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்களுடன், அவசரகால மற்றும் தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

"குவைத் ஈரானுக்கு மிக அருகில் உள்ள நாடு என்றும், குவைத்தையும் ஈரானின் கடற்கரையையும் வெறும் 80 கிலோமீட்டர் தூரமே பிரிக்கிறது. எனவே ஈரானின் இந்தத் தாக்குதல்களால் இது மிக எளிதாக குறிவைக்கப்படக்கூடிய நாடாக இருக்கலாம்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளனர்.

குவைத் மீது "விரோத ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்" நடைபெற்று வருவதாக அரசு செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஈரானிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட சத்தம் நாடு முழுவதும் கேட்கப்பட்டதால், வானில் வெடிப்புகள் ஏற்பட்டபோது சைரன்கள் ஒலித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: