News Just In

4/04/2026 06:10:00 AM

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு



வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: