எரிபொருள் விலைத்திருத்தத்திற்கு புதிய முறை..! வரப்போகும் திட்டம் குறித்து கசிந்துள்ள தகவல்
உலக சந்தையில் எண்ணெய் விலைக்கு அமைய மாதமொன்றுக்கு பலமுறை எரிபொருள் விலைத்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய புதிய முறைமையொன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக இந்த புதிய முறைமையை கொண்டுவர அவதானம் செலுத்தப்பட்டுள்ளாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இந்த புதிய முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இது மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாராந்த அடிப்படையில் திருத்தங்களைக் கருத்தில் கொள்ளும் சாத்தியக்கூறுடன் விலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
ஒரு வாரத்தில் உலக விலைகள் குறைந்தால், இலங்கை அதற்கேற்ப விலைகளைச் சரிசெய்யும். அதேபோல், அடுத்த வாரம் விலைகள் உயர்ந்தால், உள்ளூர் விலைகளும் அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போதும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4/12/2026 03:02:00 PM
Home
/
Unlabelled
/
எரிபொருள் விலைத்திருத்தத்திற்கு புதிய முறை..! வரப்போகும் திட்டம் குறித்து கசிந்துள்ள தகவல்
எரிபொருள் விலைத்திருத்தத்திற்கு புதிய முறை..! வரப்போகும் திட்டம் குறித்து கசிந்துள்ள தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: