
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் அணுசக்தி விவகாரத்தில், புதிய முன்மொழிவு ஒன்றை அமெரிக்கா நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அணுசக்தித் திட்டத்தின் ஒரு பகுதியான யுரேனியம் செறிவூட்டலை (Uranium Enrichment) அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்தது.
ஆனால், இந்த கால அவகாசம் போதாது எனத் தெரிவித்த அமெரிக்கா, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை முடக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரானின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மூத்த ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் (The New York Times) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது
No comments: