
மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் உச்சமடைந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதனை ஈரான் இடைநிறுத்தியுள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ 'பார்ஸ்' (Fars) செய்திச் சேவை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மற்றும் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் பாரிய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் 30% இந்த ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே நடைபெறுகிறது.
ஈரானின் இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
08 திகதி பெய்ரூட் உள்ளிட்ட லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் முன்னெடுத்த "மிகப்பெரிய" வான்வழித் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கடற்படைகள் அதியுயர் தயார் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
No comments: