நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய வருடாந்த அதிபர் இடமாற்ற நடவடிக்கையின் பின்னர், சில பாடசாலைகளில் பணியாற்றிய அனுபவமிக்க அதிபர்கள் உரிய பதிலீடு இல்லாமல் மாற்றப்பட்டதாகவும், ஓய்வு பெற்ற அதிபர்களுக்குப் பதிலாக புதிய அதிபர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பாடசாலை நிர்வாகம் சீர்குலைந்து கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக கல்வி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இந்த நிலை மருதமுனை, கல்முனை, மாவடிப்பள்ளி, காரைதீவு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் காணப்படுகிறது.
அதனாட்டிப்பாடையில் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயம், மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயம், காரைதீவு இ.கி.மி ஆண்கள் பாடசாலை, காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலையே இந்த வெற்றிடம் நிலவுகிறது.
மேலும், தற்போது பாடசாலைகளுக்கான அதிபர் நியமன அதிகாரம் முழுமையாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் மையப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, தரம் III பாடசாலைகளுக்கான அதிபர்களை வலயக் கல்வி பணிப்பாளர் நியமித்ததுடன், தரம் II பாடசாலைகளுக்கான நியமனங்கள் மாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேபோல் 1AB மற்றும் 1C தர பாடசாலைகளுக்கான அதிபர் நியமன அதிகாரம் மாகாண கல்வி செயலரிடம் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த மையப்படுத்தப்பட்ட நடைமுறையினால் தாமதங்கள் ஏற்பட்டு, பல பாடசாலைகள் நிரந்தர தலைமை இன்றி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் ஏ. எல். எம். முக்தார் கவலை வெளியிட்டுள்ளார்.

No comments: