- மேலும் 50 வெற்றியாளர்களுக்கும் காசோலைகள் வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையினால் (DLB) முன்னெடுக்கப்படும் ‘கப்ருக்க’ (Kapruka) அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பில், இலங்கையின் லொத்தர் வரலாற்றில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகூடிய பரிசுத்தொகையான ரூ. 629,855,919.60 (சுமார் 63 கோடி) மெகா ஜெக்பொட் பரிசு வெற்றியாளர் உள்ளிட்ட 51 பேருக்கு இன்று (10) காசோலைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 2026.02.19 அன்று நடைபெற்ற ‘கப்ருக்க’ சீட்டிழுப்பில் இந்த மாபெரும் ஜெக்பொட் வெற்றி பதிவாகியது.
No comments: