மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் அரசியல் அலுவலகத்தில் பெப்ரல் (PAFFREL) அமைப்பிற்கும் உயர்மட்டப் பிரதிநிதிகள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநசன்,வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோருடன் நேற்று முந்தினம் (09) கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் போது, தற்போதைய தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வாக்காளர் பதிவு மற்றும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகள், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன.அத்துடன், அரச அதிகாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

No comments: