News Just In

3/11/2026 02:27:00 PM

ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முன்வரும் புதினுக்கு ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முன்வரும் புதினுக்கு ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?




ஈரான், அமெரிக்​கா - இஸ்​ரேல் இடையே போர் தொடங்கி இன்று 12-வது நாளை எட்​டியது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய அதிபர் புதின் முன்வந்துள்ளார். இதற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்.

ஈரானின் எண்​ணெய்க் கிணறுகள் மீது இஸ்​ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரி​கின்​றன. இதன் காரண​மாக டெஹ்ரானிலும், டெஹ்​ரானைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களி​லும் வானில் கரு​மேகங்​கள் சூழ்ந்​துள்​ளன. இதனால் சுற்றுச்​சூழலுக்கு பெரும் கேடு ஏற்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள் வசிக்​கும் வீடு​களி​லும் கூட கரும்​புகை சூழ்ந்துள்ளது. பொது​மக்​கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலும் கூட புகை மேகங்​கள் சூழ்ந்​துள்​ளன. இதனால் அங்​குள்ள நோயாளி​கள் மூச்​சு​விட முடி​யாமல் திணறி வரு​வ​தாக தெரிய​வந்​துள்​ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை (கிரெம்​ளின்) செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஈரான் மீது ராணுவ நடவடிக்கை தொடங்​கு​வதற்கு முன், பிரச்​சினை​யின் தொடக்க நிலை​யிலேயே அதை தீர்ப்​ப​தற்​காக பல்​வேறு யோசனை​களை அதிபர் விளாடிமிர் புதின் தெரி​வித்​தார். இதில் பல யோசனை​கள் இப்​போதும் பரிசீலனைக்கு உகந்​தவை. இந்த விவ​காரத்​தில் ரஷ்யா தன்​னால் முடிந்த அளவு உதவி செய்​யத் தயா​ராக உள்​ளது.

மேலும் அவ்​வாறு செய்​வ​தில் மகிழ்ச்சி அடைகிறது. என்​றாலும் இதற்கு பல புரிதல்​கள் மற்​றும் பல ஒப்​பந்​தங்​கள் தேவை என்​பதை நீங்கள் அறிவீர்​கள். எனவே நாங்​கள் சற்று பொறுமை காக்க வேண்​டி​யுள்​ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி​யில் பேசியதற்கு மறு​நாள் இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. ஈரானுக்கு எதி​ரான போரை விரை​வில் முடிவுக்​குக் கொண்டு வருவதே இந்த தொலைபேசியின் நோக்​கம் என கிரெம்​ளின் தெரி​வித்​தது.

இது குறித்து ட்ரம்ப் கூறுகை​யில், “ஈரான் விவ​காரத்​தில் புதின் உதவி செய்ய விரும்​பு​கிறார். இருப்​பினும், உக்​ரைன்​-ரஷ்யா போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதன் மூலம் நீங்​கள் இன்​னும் உதவி​யாக இருக்க முடி​யும்​ என்​று நான்​ புதினிடம்​ தெரி​வித்​தேன்​" என்​றார்​.

No comments: