தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார அறிவித்துள்ளார்.
அத்துடன் பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
எனினும் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை எனவும், கொள்கலன்களைப் பரிசோதிக்கும் இடவசதி குறைவாக இருப்பதாலேயே சிறு தாமதங்கள் ஏற்படுவதாகவும், தற்போது அந்த இடவசதிகள் விரிவாக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.சுப்பிரமணியம் இது குறித்துக் கூறுகையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை. இடைத்தரகர்களே செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை அதிகரித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மார்ச் மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் பருப்பு விலை மீண்டும் 265 - 270 ரூபா வரை குறையும்.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிகபட்சம் 20 ரூபா மட்டுமே மாற்றம் ஏற்படலாம் என சுட்டிக்காடியுள்ளார்.
கட்டுப்பாட்டு விலை
இது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில், பருப்புக்குக் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், சில்லறை விலையில் கடுமையான தலையீடுகளைச் செய்ய முடியாது.
இருப்பினும், பொருட்கள் பதுக்கப்பட்டால் நுகர்வோர் விவகார அதிகார சபை ஊடாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சித்திரைப் புத்தாண்டுக்குத் தேவையான 90 சதவீதமான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: